Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி மீனவர்கள் கைது .... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி வலியுறுத்தல்

தூத்துக்குடி மீனவர்கள் கைது …. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி வலியுறுத்தல்

-

லட்சத்தீவுகள் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தருவைக்குளம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை மனு வழங்கினார்.

டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த 16-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை, லட்சத்தீவு கடலோர காவல்படையினர் சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குஜராத் மாநிலம் போர்பந்தர் பகுதியில் காணாமல் போன தூத்துக்குடி மீனவர் அண்ணாதுரையை உடனடியாக மீட்கவும், விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்ம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

MUST READ