Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி பனிமயமாதா பேரலாய திருவிழா- உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி பனிமயமாதா பேரலாய திருவிழா- உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

-

தூத்துக்குடி பனிமயமாதா பேரலாய திருவிழா- உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடியில் பனிமயமாதா திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Image

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த ஆண்டு 441வது திருவிழாவானது, தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த தங்கத்தேர் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவிழாவானது, கடந்த 26ம் தேதியன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு 16வது தங்கத்தேர் திருவிழா என்பதால் விழாவில் தினமும் ஒரு மறை மாவட்ட ஆயர் பங்கேற்கின்றனர். அதன்படி இன்று கோவா உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி, மற்றும் கோவை பிஷப் தாமஸ் ஆக்குவினாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர். தூத்துக்குடியில் பனிமயமாதா திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கமாக பக்தர்களின் தரிசனத்திற்காக தேர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை கோவில் வளாகத்தில் நிறுத்தப்படும் ஆனால் இந்த ஆண்டு ஆவின் பிறந்த நாளான செப்டம்பர் எட்டாம் தேதி வரை தேர் பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் வளாகத்தில் நிறுத்தப்படும் என தெரிகிறது.

MUST READ