
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை- அணைகள் வேகமாக நிரம்புகின்றன!
ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தும், சாலைகள் மற்றும் பாலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. பொதுப்போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
இந்த நிலையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.
கனமழை எதிரொலி- 6 ரயில் சேவைகள் ரத்து!
மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் 80778- 80779 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.