Homeசெய்திகள்தமிழ்நாடுபுலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..

புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..

-

- Advertisement -

வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உட்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது.இங்கு 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை,மான்,யானை,புலி போன்ற பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா செல்லும் வழியில் கொத்தமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொமரத்தூர் வனப்பகுதியில் உள்ள ஒரு ஓடையில் சுமார் 6 வயது ஆன ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது.

வனத்துறையினர் மருத்துவகுழுவினரை சம்பவ இடத்திற்கே வரவைத்து உடற்கூறு ஆய்வு செய்து பின்னர் வனப்பகுதியில் புலியின் உடலானது எரிக்கப்பட்டது.

உடற்கூறு ஆய்வில் புலியானது வனப்பகுதியில் மான்கள் மற்றும் பன்றிகள் போன்றவற்றை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியால் ஆன கன்னியில் சிக்கிக் கொண்டு 10 நாட்களுக்கும் மேல் உணவு இல்லாமலும், அதிலிருந்து தப்பிக்க முடியாமலும் இறந்துள்ளது தெரியவந்தது.இது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

வனத்துறையினரின் விசாரணையில் சுசில் குட்டை பக்தியைச் சேர்ந்த சதீஷ்,நாச்சை முத்து,பத்மகுமார்,லோகேஷ் பால்,தினகரன்,சவுந்தராஜ்,ம்ற்றும் 17 வயதான  சிறுவன் ஒருவன் ஆகியோர் அவ்வபோது பன்றிகள் மற்றும் மான்களை  வேட்டையாட இரும்பு  கம்பியால் ஆன கன்னிகளை வைத்து வந்தது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 7 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

MUST READ