வரும் அக்டோபர் 11- ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
“காங்கிரஸோடு ஏன் கூட்டணி வைத்துள்ளீர்கள்?”- பேரவையில் எடப்பாடி பழனிசாமி கேள்வி!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (அக்.09) காலை 10.00 மணிக்கு கூடிய நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர், ஒருமனதாகத் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது தொடர்பாக, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்!
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “மொத்தமாக மூன்று நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும். அதாவது, வரும் அக்டோபர் 11- ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.