Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.15 கோடி வசூல்!

திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.15 கோடி வசூல்!

-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல்கள் மூலம் 5 கோடியே 15 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிTல் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் காணிக்கைகள் அவ்வப்போது எண்ணப்பட்டு வருகிறது.

இதன்படி செப்டம்பர் மாத உண்டியல் எண்ணிக்கை எண்ணும் பணி கடந்த 23 மற்றும் 24ஆம் தேதிகளில் கோவில் வசந்த மண்டபத்தில், தர்க்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணி குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீஜெய மங்கள ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

2 நாட்கள் நடைபெற்ற எண்ணும் பணியில் 5 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 834 ரூபாய் காணிக்கையாக வசூலாகியுள்ளது. மேலும், 2 கிலோ 352 கிராம் தங்கம்,  41 கிலோ 998 கிராம் வெள்ளி, 61 கிலோ 600 கிராம் பித்தளை, 5 கிலோ 129 கிராம் செம்பு ஆகியவை கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும்,  1,589 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் வசூலாகியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

MUST READ