Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

திருப்பூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூரில் அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் திரு. அருணாச்சலம் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் .திருப்பூர் தொகுதியின் விவசாயம் மற்றும் நீர்வளம் மேம்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய அரசு @AIADMKOfficialஅரசு! திமுக கூட்டணி சார்பில் 2019ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 எம்பிக்கள் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

நேற்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கொடுக்க முடியாது என்று சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்திறக்க திராணியற்ற முதல்வர் இன்றைய முதல்வர் @mkstalin அவர்கள்! பெங்களூருக்கு கூட்டணிக்காக செல்லும் திரு.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர கோரிக்கை வைத்தாரா? 15க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசிய திரு. ஸ்டாலின் அவர்கள், ஒருமுறையாவது விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசியுள்ளாரா? விவசாயிகளை காக்கின்ற ஒரே கட்சி @AIADMKOfficial தான்! எனக் கூறினார்.

MUST READ