Homeசெய்திகள்தமிழ்நாடு+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்

+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்

-

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்

 

+2 தேர்வில் திருப்பூர் முதலிடம்

திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 849 மாணவ மாணவிகளில் 23 ஆயிரத்து 242 மாணவ மாணவர்கள் தேர்ச்சி அடைந்து 97.45 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும் 95.75 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

ஈரோடு, சிவகங்கை தேர்ச்சி சதவீதத்தில் 2ம் இடம்

+2 பொது தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாமிடம் பிடித்தது. 95.63 சதவீதம் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வினை 9864 மாணவர்களும், 11362 மாணவிகள் என மொத்தம் 21226 பேர் எழுதினர். இதில் 9540 மாணவர்களும், 11138 மாணவிகளும் என மொத்தம் 20 ஆயிரத்து 678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவர்கள் 96.72 சதவீதமும், மாணவிகள் 98.03 சதவீதம் என மொத்தம் 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 2ம் இடம் பெற்றுள்ளனர்.

+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்

அரசு பள்ளிகளை பொறுத்த வரை ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 112 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 4325 பேரும், மாணவிகள் 6101 என மொத்தம் 10 ஆயிரத்து 426 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4 ஆயிரத்து 64 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 906 பேரும் என தேர்வு எழுதியதில் 9 ஆயிரத்து 970 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 95.63 சதவீதமாகும்.

சிவகங்கை மாவட்டம் பிளஸ் டூ தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டம் இந்த முறை 2வது இடத்தைப் பிடித்தது.

இந்த ஆண்டு தேர்வில் 14925 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 14540 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடம் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்கள் 6707, மாணவிகள் 8218 என மொத்தம் 14925 பேர் தேர்வெழுதியதில் மாணவர்கள் 6469, மாணவிகள் 8071 என மொத்தம் 14540 பேர் தேர்ச்சி பெற்றனர்.

+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்

அதே போன்று 70 அரசு பள்ளிகளில் மாணவர்கள் 2230 பேரும், மாணவிகள் 3423 பேர் என்றும் மொத்தம் 5653 பேர் தேர்வு எழுதி இருந்தனர். அதில் மாணவர்கள் 2087 பேர் மாணவிகள் 3315 பேர் என 5402 பேர் தேர்ச்சி பெற்று அரசு பள்ளிகளில் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு ஆறாவது இடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டம் இந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் மாநில அளவில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

+2 தேர்வில் அரியலூர் 3ம் இடம்

அரியலூர் மாவட்டம் பிளஸ் டூ பொது தேர்வில் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளது.

MUST READ