திருப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு பேர் சரக்கு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் சரவணபவான் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் காவிளிப்பாலையம் புதூரில் கட்டிட வேலை பார்த்து வந்தனர். அவர்கள் இருவரும் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அப்போது அதிவேகமாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் ராஜ்குமார் மற்றும் சரவணபவான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். காவிளிப்பாளையம்புதூரில் கட்டடப்பணிக்கு சென்ற இருவரும் தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்த இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு பேர் சரக்கு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.