Homeசெய்திகள்தமிழ்நாடுதிருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

-

 

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்திப் பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அமரன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு… சென்னையில் தொடக்கம்…

கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், முருகனை மனமுருக வழிபட்டார். அதைத் தொடர்ந்து, கோயில் முழுவதும் சுற்றிப் பார்த்தார். பின்னர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் கோயிலின் அர்ச்சகர்கள், பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி விவாகரத்துக் கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த சூழலில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோயிலில் வழிபட்டு சென்றுள்ளார்.

அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….

திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றால், குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்; பொருளாதாரத்தில் மென்மேலும் வளர்ச்சி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ