திருவள்ளூர் அரசு பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணிமனை ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் சார்பில், 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அதில் வரவு – செலவு பற்றாக்குறை ஈடுகட்ட 2022 ஆம் ஆண்டு போட்ட G.O. படி நடப்பாண்டில் நிதி ஒதுக்க வேண்டும், டிசம்பர் 2022 முதல் ஓய்வு பெற்றோருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் போக்குவரத்து துறையில் தனியாரை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும், 25 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதி படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துக ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.