2024 மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான “வார் ரூம்” திறக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆவடி ரயில் நிலையம் அருகே திமுக அலுவலகத்தில் “வார் ரூம்” திறப்பு நிகழ்ச்சி ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பெ.வினோத் வரவேற்புரை நிகழ்த்தினார். திமுக வழக்கறிஞர் அணி மாநில செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர். இளங்கோவன் கலந்து கொண்டு வார் ரூம்மை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் என்.ஆர்.இளங்கோவன் பேசியதாவது: இந்த காலக்கட்டத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்றும், அதில் வழக்கறிஞர்கள் கவனத்துடன் எப்படி வேலை செய்ய வேண்டும் என்றும், வார் ரூமின் அவசியம் குறித்தும் விளக்கமாக பேசினார். இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மேயர் ஜி, உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன்பிரகாஷ், பகுதிச் செயலாளர் பேபி சேகர், பொன்.விஜயன் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்