திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பினர்.
திருவாரூர் ரயில் நிலையம் எதிரில் பழைய தஞ்சாவூர் சாலையிலிருந்து வந்த ரோடு ரோலர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன் சக்கரம் உடைந்து எதிரே நாகலூர் கிராமத்திற்கு சென்ற நகரப் பேருந்து மீது இடித்தது இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.