ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன கோஷம் .கொலை முயற்சி செய்ய முயன்ற கொலையாளிக்கு ஆதரவாக திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் உறுதி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்றத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞரை வழக்கறிஞரிடம் உதவியாளராக பணிபுரியும் ஆனந்தன் என்பவர் சொந்த பிரச்சனை காரணமாக கத்தியால் தாக்கியுள்ளார்.
இந்த கொலை முயற்சி தொடர்பாக கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் ஒன்றிய அரசு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணி சாலையில் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து பேசிய வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணி கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ஆதரவாக திருவொற்றியூர் வழக்கறிஞர் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று தெரிவித்தார் . கொலை செய்துவிட்டு வரும் கொலையாளிகளுக்கு ஜாமின் வாங்கி கொடுப்பதே வழக்கறிஞர் தானே என்ற கேள்விக்கு தொழில் வேறு கொலை வேறு ,தொழிலாக பார்த்தால் எங்கள் தொழிலை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். கொலை செய்ய நாங்கள் சொல்லவில்லை கொலை செய்து விட்டு வருபவர்களுக்கு ஆஜராகி ஜாமீன் வாங்கி கொடுப்பதாக தெரிவித்தார். ஸ்காட்லாந்து போலீஸ் இணையாக தமிழக போலீஸார் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என கேட்டுக்கொண்டார்.
ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை – அன்புமணி..!!