Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்பேரவையில் இருந்து பாமக எம். எல்.ஏக்கள் வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து பாமக எம். எல்.ஏக்கள் வெளிநடப்பு

-

கள்ளக்குறிச்சி விஷச்சராய சம்பத்தில் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி சட்டப்பேரவையில் இருந்து பாமக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் படி அதிமுக எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி, பாமக எம்எல்ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதையடுத்து பேசிய ஜி.கே.மணி, சந்துக்கடை என்ற பெயரில் சாராய விற்பனை நடப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், மதுக்கடைகளை மூடுவோம் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? என கேள்வி எழுப்பியதுடன் மதுபானம் போலவே கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையால் மாணவர்கள் சீரழிவதாக வேதனை தெரிவித்தார்.

MUST READ