![தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/10/tn-assembly-over-1.jpg)
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அவற்றை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) நடைபெறுகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல்!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல், இடித்தடிப்பதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதன் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில், வைக்கப்பட்டுள்ள 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருந்தார்.
திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக, தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) கூடுகிறது. காலை 10.00 மணிக்கு அவை கூடியதும், ஆன்மீகவாதி பங்காரு அடிகளார், சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்படவுள்ளன.
சந்தானம் நடிக்கும் பில்டப் படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட்!
இதைத் தொடர்ந்து, 10 சட்ட மசோதாக்களை அவையில் தாக்கல் செய்வது தொடர்பான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். காரணம் குறிப்பிடாமல் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாகக் கூறி, சட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையது அல்ல. பேரவை விதி 143- ன் கீழ் சட்ட மசோதாக்களை மறு ஆய்வு செய்து ஆளுநரின் ஒப்புதலுக்காகத் திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, 10 மசோதாக்களையும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தாக்கல் செய்வார்கள்.