Homeசெய்திகள்தமிழ்நாடுகுடிமை பணி தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.7,000 உதவித்தொகை

குடிமை பணி தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.7,000 உதவித்தொகை

-

- Advertisement -

குடிமை பணி தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.7,000 உதவித்தொகை

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

pt palanivel budget

அப்போது பேசிய அவர், “மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும்.

54 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் திறன்மிகு பயிற்சி நிலையங்களாக மாற்றப்படும். இதற்கு ரூ.2,783 கோடி ஒதுக்கீடு

நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சூளகிரியில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ரூ.80 கோடி ஒதுக்கீடு

54 அரசு பாலிடெக்னிக்குகள் திறன்மிகு பயிற்சி நிலையங்களாக மாற்றப்படும். இதற்காக ரூ.2,783 கோடி ஒதுக்கீடு

ஒன்றிய குடிமை பணி தேர்வு எழுதும் ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.

உயர்கல்வித்துறைக்கு ரூ.1,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

54 அரசு பாலிடெக்னிக்குகள் திறன்மிகு பயிற்சி நிலையங்களாக மாற்றப்படும். அதற்கு ரூ.2,783 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும்.

ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.

ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4 விடுதிகள் கட்டப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறைக்கு ரூ.3,513 கோடி நிதி ஒதுக்கீடு

முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ்நாட்டின் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கப்படுத்தப்படும்.

தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு கருவிகள் வாங்க மானியம் வழங்கப்படும்” என்றார்.

MUST READ