Homeசெய்திகள்தமிழ்நாடு5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

-

- Advertisement -

5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

TRB

அதன்படி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்துவந்த நிதி, மனிதவள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம், புள்ளியியல் ஆகிய துறைகளை தங்கம் தென்னரசு கவனிப்பார்.தங்கம் தென்னரசு ஏற்கனவே வகித்துவந்த தொல்லியல் துறையையும் அவரே கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் இருந்த தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பு, மனோ தங்கராஜிடம் வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பொறுப்பேற்கும் தங்கம் தென்னரசுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் 2 ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கி தற்போது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

MUST READ