Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் மீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா! கோவை முதலிடம்

தமிழகத்தில் மீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா! கோவை முதலிடம்

-

தமிழகத்தில் மீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா

கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் தற்போது 58 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Hospital fire kills 13 COVID patients in India – DW – 04/23/2021
கொரோனா தொற்றால் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை, காலங்களில் கோவையில் அனைத்து துறைகளும் முடங்கியது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் அனைத்து துறைகளும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதற்கிடையே தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்க துவங்கியுள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் நேற்று மூன்று பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 58 பேர் தற்போது கொரோனா சிகிச்சைக்காக மாவட்ட முழுவதும் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில், கொரோனா பாதிப்பில் மாநில அளவில் கோவை முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒற்றை இலக்கங்களில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படி முக கவசம் அணிய தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்திருக்கின்றார்

MUST READ