Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

-

 

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
TN Govt

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, நாளை (மார்ச் 06) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2015- ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசை ‘தனி ஒருவன்’ திரைப்படம் வென்றிருக்கிறது.

ரமலான் நோன்புக்கு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரி வழங்க முதலமைச்சர் உத்தரவு

2015- ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சிறந்த திரைப்படங்களுக்கான முதல் பரிசை தனி ஒருவர், இரண்டாம் பரிசை பசங்க- 2, மூன்றாம் பரிசை பிரபா, நான்காம் பரிசை இறுதிச் சுற்று ஆகிய திரைப்படங்கள் பெறுகின்றன. சிறப்பு பரிசுக்கு 36 வயதினிலேயே திரைப்படம் தேர்வுச் செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகராக மாதவன், சிறந்த நடிகையாக ஜோதிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு பரிசு நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை ரித்திகா சிங்கிற்கும் வழங்கப்படவுள்ளன. சிறந்த இயக்குநராக சுதா கொங்கரா தேர்வு செய்யபட்ட நிலையில், சிறந்த கதையாசிரியராக மோகன் ராஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த நபர்!

சிறந்த வில்லனாக அரவிந்த் சாமியும், சிறந்த நகைச்சுவை நடிகராக சிங்கம் புலியும், நகைச்சுவை நடிகையாக தேவதர்ஷினியும் விருதை பெறுகின்றனர். சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஜிப்ரானும், சிறந்த பாடலாசிரியர் விருதை விவேக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ