Homeசெய்திகள்தமிழ்நாடு'துணைவேந்தர் பதவி'- புதிய குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு அரசு!

‘துணைவேந்தர் பதவி’- புதிய குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு அரசு!

-

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
Photo: TN Govt

சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரைத் தேர்வுச் செய்ய ஏற்கனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குழு அமைத்திருந்த நிலையில், புதிய குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. குறிப்பாக, ஆளுநர் அறிவித்த குழுவில் இடம் பெற்றிருந்த பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியை நிராகரித்து தமிழ்நாடு அரசு தனியாகத் தேர்வுக் குழு அமைத்து, அரசாணையை வெளியிட்டுள்ளது.

அக்.9-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது!

அதன்படி, கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தீனபந்து, முன்னாள் துணைவேந்தரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜெகதீசன் ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

சீமான் மீதான வழக்கு- காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி!

ஒரு துணைவேந்தரை தேர்வுச் செய்ய ஆளுநரும், தமிழ்நாடு அரசும் தனித்தனியே குழு அமைத்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

MUST READ