Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழக அரசு இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தருகிறது"- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

“தமிழக அரசு இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தருகிறது”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

-

 

"தமிழக அரசு இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தருகிறது"- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!
Video Crop Image

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.16) காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரில் சந்தித்துப் பேசினார். விண்வெளி துறையில் இஸ்ரோ நிறுவனம், செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், அதில் தமிழக பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்வதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் ஸ்டிரைக்!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இஸ்ரோவுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருகிறது. குலசேகரப்பட்டினம் திட்டத்திற்கு தமிழக அரசு உதவியாக இருக்கிறது. விண்ணிற்கு மனிதர்களை அனுப்புவது அவ்வளவு எளிதல்ல; அது பெரும் முயற்சி. சந்திரயான் திட்டங்களுக்கு பணியாற்றிய விஞ்ஞானிகளைப் பாராட்டியதற்காக, நன்றி கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ