Homeசெய்திகள்தமிழ்நாடுTN - RISE நிறுவனத்தை தொடங்கி வைத்த உதயநிதி

TN – RISE நிறுவனத்தை தொடங்கி வைத்த உதயநிதி

-

TN – RISE எனும் தமிழக ஊரக தொழில் காப்பு, புத்தொழில் உருவாக்க நிறுவனத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்துள்ளார்.

TN - RISE நிறுவனத்தை தொடங்கி வைத்த உதயநிதி

இந்நிகழ்ச்சியில் மகளிரின் பொருளாதார சுதந்திரத்துக்கான திட்டங்களை பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வரும் நம் திராவிட மாடல் அரசின் அடுத்தகட்ட முன்னெடுப்பாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் TN – RISE ( Tamil Nadu Rural Incubator and Start – up Enabler) தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிலிருந்து அதிகளவிலான மகளிரை தொழில்முனைவோர்களாகவும் – தொழிலதிபர்களாகவும் உருவாக்கிட வேண்டும் எனும் மாபெரும் இலக்கோடு தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், தொழில் தொடங்க விரும்பும் மகளிருக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் – உதவிகளையும் வழங்கவுள்ளது. ஆண் தொழில் முனைவோர்களுக்கு இணையாக மகளிர் தொடங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், “வாழ்ந்து காட்டுவோம்” என்ற திட்டத்தின் கீழ் புதிய நிறுவனமொன்றையும் தமிழக அரசு சார்பில் தொடங்கிவைத்தார்.

TN - RISE நிறுவனத்தை தொடங்கி வைத்த உதயநிதி

குறிப்பாக ஊரக பகுதிகளில் இருந்து மகளிர் தொழில் முனைவோரை உருவாக்க அனைத்து வகையிலும் TN- RISE துணை நிற்கும். உலக வங்கியின் உதவியோடும் – தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படவுள்ள TN-RISE, மகளிருக்கு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்குவது, நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவது, நிதி மேலாண்மை – சந்தை நிலவரம் குறித்த புரிதலை ஏற்படுத்துவது என்று பல்வேறு தளங்களில் இயங்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

சென்னையில் பற்றி எரிந்த ஏசி பேருந்து

இந்நிகழ்வின் போது, TN-RISE-ன் லோகோ மற்றும் இணையதளத்தையும் தொடங்கி வைத்த அவர், கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்கு திமுக அரசு பாடுபடும் என்றார்.

MUST READ