Homeசெய்திகள்தமிழ்நாடுதேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ

தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ

-

தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவி பகுதியின் மேல் உள்ள வெள்ளக்கெவி வனப்பகுதியில் நேற்று மாலையில் காட்டுத்தீ ஏற்பட்டு மளமளவென பரவத் தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் தீ கொழுந்து விட்டு எரிவதால் வனப்பகுதியில் உள்ள அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் கருகி சாம்பலாகின. வன உயிரினங்களும் தீயினால் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

ஏற்கெனவே ஐந்து நாட்களுக்கு முன்பு அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், தீயணைப்புத்துறையினர் உள்பட 20 பேர் குழுவினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும், இரவு நேரம் என்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக பெரியகுளம் வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ