டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!
இது குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வரையிலும் வெளியிடப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் முக்கிய பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!
தேர்வுகளை நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதில் செய்யப்படும் தாமதமும், குளறுபடியும் தேர்வர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிக கடுமையான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் எந்த குழப்பமும் இன்றி, 10 மாதங்களில் நடத்தி முடிவுகளை வெளியிடும் போது, அறிவிக்கப்பட்டு 21 மாதங்களாகியும் குரூப் 2 தேர்வு நடைமுறைகள் முடிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.