Homeசெய்திகள்தமிழ்நாடுTNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டம் மாற்றம்..

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டம் மாற்றம்..

-

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்தந்தப்பணியிடங்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான தேர்வு அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி.

அதன்படி, 6,244 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது. அதேபோல் 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்- 1 தேர்வு ஜூலை 13ம் தேதியும், 29 பணியிடங்களுக்கான குரூப் 1-பி மற்றும் குரூப் 1-சி தேர்வு ஜூலை 12ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2,030 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதியும், 730 காலிப்பணியிடங்களை கொண்ட தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் மாதம் 17ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாடத்திட்டம் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டம் கீழ்கானும் லிங்கில் https://tnpsc.gov.in/English/syllabus.html , https://tnpsc.gov.in/English/scheme.html’ கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப்2ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வுகள் தனித்தனியே நடத்தப்படும் என ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ