Homeசெய்திகள்தமிழ்நாடுரூபாய் 50,000-ஐ தாண்டியது தங்கம் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

ரூபாய் 50,000-ஐ தாண்டியது தங்கம் விலை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

-

தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.49,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ6,185-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் திங்கட்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.49,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,205க்கு விற்பனையானது., நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.49,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. . இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.6,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை பரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 6,215-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.49720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை அதிகரித்ததை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. . வெள்ளியின் விலை கிராமிற்கு 30 பைசாக்கள் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.80.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.80,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ