சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 54,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.6,850-க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ,55,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 54,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தங்கம் விலையானது முந்தைய நாள் விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் 54,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.110 குறைந்து ரூ.6,750-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.30 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97-க்கும், பார் வெள்ளி ரூ.97,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.