சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ,53,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ,53,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ,54,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி முந்தைய நாள் விலையில் ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து கிராம் ரூ.98 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.