சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் 48,880க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 7ஆம் தேதி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,840 ரூபாய்க்கு விற்பனையானது.
இதனைத்தொடர்ந்து கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி கிராமுக்கு ரூ.6150க்கும் மற்றும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.49,200க்கும் விற்பனையானது . இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.6110க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து ரூ.48,880க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த சில நட்களாக தங்கம் விலை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது விலைக் குறைந்து உள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.