Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - இன்றைய விலை என்ன தெரியுமா?

அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?

-

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி முந்தைய நாள் விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,830-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெள்ளி விலையானது கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.99.50-க்கும் பார் வெள்ளி ரூ.99,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

MUST READ