சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.55,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் தங்கம் விலையானது ஒரே நாளில் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.55,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.55,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,875-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 1.45 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.97.75-க்கும் பார் வெள்ளி ரூ.97,750க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.