Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து குறைந்து வரும் ஆபரண தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம் இதோ!

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் இதோ!

-

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.51,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த புதன்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51.920-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தங்கம் விலையானது முந்தைய நாள் போல் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51,440-க்கு விற்பனையானது.

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

இந்நிலையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6,415-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்ததை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு கிராம் ரூ.89-க்கும் பார் வெள்ளி 89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

MUST READ