Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

-

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் 49,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி வரையில் தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி கிராமுக்கு ரூ.6150க்கும் மற்றும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.49,200க்கும் விற்பனையானது. கடந்த 13 ஆம் தேதி தங்கம் விலையானது அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.6110க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து ரூ.48,880க்கும் விற்பனையாகி வந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ25 உயர்ந்து, 6,135க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ200 உயர்ந்து ரூ49,080க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்றைய தங்கம் விலையானது ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,125-க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.49,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.80க்கும், பார் வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையில், இன்று தங்கம் விலையானது குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ