சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.51,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51,440-க்கு விற்பனையானது. நேற்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 51,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6,465-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு கிராம் ரூ.89-க்கும் பார் வெள்ளி 89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரங்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.