Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?

அதிரடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – எவ்வளவு குறைந்தது தெரியுமா?

-

தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.51,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 51,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி முந்தைய நாள் விலை தொடர்ந்து ஒரு சவரன் ரூ.51.720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 50ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6,415-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.89.50-க்கும் பார் வெள்ளி 89,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

MUST READ