Homeசெய்திகள்தமிழ்நாடுகுறைந்தது தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

குறைந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

-

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.49,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் கடந்த வாரம் வெள்ளி கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.49,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.49,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ6,185-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.49,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,205க்கு விற்பனையானது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.49,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.6,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 30 பைசாக்கள் குறைந்து, ஒரு கிராம் ரூ.80.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 80,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ