Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை - இல்லத்தரசிகள் கவலை!

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை!

-

- Advertisement -

தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52.920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.88 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 53,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,670-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

MUST READ