கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், கனமழை எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அறிவித்துள்ளார்