
தமிழகத்தில் இன்றும் (ஏப்ரல் 13) மிதமான மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி!
வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
மழை படிப்படியாகக் குறைந்து மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும். தமிழகத்தில் 4 டிகிரி வரை அடுத்தடுத்து வரும் நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்
இதனிடையே, தமிழகத்தில் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.