Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் மோடியுடனான இன்றைய சந்திப்பு மகிழ்ச்சி - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

பிரதமர் மோடியுடனான இன்றைய சந்திப்பு மகிழ்ச்சி – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

-

- Advertisement -

பிரதமருடனான இன்றைய சந்திப்பானது, அந்த  மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமர் கையிலே உள்ளது என்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் டெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேட்டி.

பிரதமர் மோடியுடனான இன்றைய சந்திப்பு மகிழ்ச்சி - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். பிரதமரின் அலுவலகத்தில நடந்த தனது சந்திப்பு குறித்து தமிழ்நாடு  இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்ததாகவும், மகிழ்ச்சியான அந்த சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது என்பது பிரதமர் கையிலே உள்ளது என்று தெரிவித்தார்.

தான் பிரதமரை சந்தித்த போது மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்ததாகவும், அதில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கி நிதியை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடனான இன்றைய சந்திப்பு மகிழ்ச்சி - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்மேலும் “தேசிய கல்விக் கொள்கை” புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏன் தமிழ்நாடு அரசு கையெழுத்திடாமல் இருக்கிறது என்ற காரணத்தை பிரதமரிடம் விளக்கியதாவும், மத்திய அரசு நிதியை ஒதுக்கீடு செய்யாத காரணத்தால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க போதிய பணமின்றி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பிரதமரிடம் எடுத்துரைத்ததாகவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கையில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததிற்கு காரணம் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்பது, அதில் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடு இல்லை என்பதும் முதலமைச்சரின் கருத்தாக இருந்தது.

மூன்றாவது கோரிக்கையாக நாட்டின் அண்டை நாடான இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் , அனைத்து கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி துறை சார்ந்த அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வழக்கமாக 15 நிமிடங்கள் தான் பிரதமர் அலுவலகம் முதலமைச்சர்களுக்கான சந்திப்பில் நேரம் ஒதுக்கீடு செய்வார்கள். ஆனால் இன்று நடைபெற்ற சந்திப்பில் சுமார் 40 நிமிடம் பேசியதாகவும் இதிலிருந்து சந்திப்பு குறித்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

‘ஆட்சியிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு!’ என திமுக கூட்டணி கட்சியான விசிக வலியுறுத்தி வருகிறதே! என பத்திரிக்கையாளர்கள் தமிழக முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, அது விசிக-வின் நிலைப்பாடு எனவும், அவர்களின் கொள்கை சார்ந்த விஷயங்களை அவர்கள் பேசுவதாகவும் ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்துவதாக கூறினார்.

தமிழக மீனவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியுள்ள நிலையில் “கச்சத்தீவை” திமுக-காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தாரை வார்க்கப்பட்டதே தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கான காரணம் என பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, கச்சத்தீவை திமுக ஒன்றும் இலங்கைக்கு தாரை வார்க்கவில்லை எனவும், சொல்லப்போனால் கச்சத்தீவை தாரை வார்க்கும்போது திமுக எதிர்ப்பு தெரிவித்ததாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலளித்தார்.

தொடர்ந்து சோனியாகாந்தி உடனான சந்திப்பு மரியாதை நியமித்தமான சந்திப்பு மட்டுமே என தெரிவித்து விட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.

MUST READ