புயல் பாதித்த நான்கு மாவட்டங்களில் ரூபாய் 6,000 நிவாரணத்திற்கான டோக்கன்கள் இன்று (டிச.14) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. வரும் டிசம்பர் 16- ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் முன்கூட்டியே இன்று முதல் டோக்கன்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு வெளியாகும் அயலான்…. தேதியை லாக் செய்த படக்குழு!
பாதிக்கப்பட்ட பகுதி ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்படும். ரேஷன் கடைக்கு அனுமதிக்கப்பட்ட பட்டியலில் வரி செலுத்துவோர், அரசு பணியாளர்களின் பெயர் இடம் பெறாது. பட்டியலில் இடம் பெறாதவர்கள் ரேஷன் கடையில் படிவம் பெற்று, உரிய ஆதாரங்களுடன் முறையீடு செய்யலாம்.
டிசம்பர் 17- ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு முடிவுச் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின்கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் மின்கணக்கீடு செய்யாதவர்களுக்கு அக்டோபர் கணக்கீட்டின் படி மின்கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரன்பீர் கபூர் நடிக்கும் இராமாயணம்…ராவணனாக களமிறங்கும் பான் இந்திய ஹீரோ…ஷூட்டிங் எபோது?
மழை பாதிப்பால் பல்வேறு வீடுகளில் தண்ணீர் தேங்கி மின்கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.