Homeசெய்திகள்தமிழ்நாடுசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய விவகாரம்: - பொதுமக்கள் மீது திருட்டு வழக்கு

சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய விவகாரம்: – பொதுமக்கள் மீது திருட்டு வழக்கு

-

- Advertisement -

தேனி அருகே சுங்கச்சாவடி அடித்து நொறுக்கிய விவகாரத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் காணவில்லை என பொதுமக்கள் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய விவகாரம்: - பொதுமக்கள் மீது திருட்டு வழக்குதிண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் அருகே 4 வழிச்சாலை அமைப்பதாக கூறி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், 4 வழிச்சாலைக்கு பதிலாக வெறும் 2 வழிச்சாலையே அமைக்கப்பட்டது. இந்நிலையில், தேனி அருகே சுங்கச்சாவடி அமைத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டணம் வசூலிக்க முயன்றது. இதனை கண்டித்து பொதுமக்கள் நேற்று டோல்கேட்டை அடித்து நொறுக்கினர்.

இதன் எதிரொலியாக இன்று சுங்க சாவடி அடித்து நொறுக்கிய விவகாரத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் காணவில்லை எனவும், ரசீது போடும் மெஷின், பத்துக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் ,ஸ்கேனர் உள்ளிட்ட சாதனங்கள் சேதம் விளைவித்தாக புகாா் அறிக்கப்பட்டது. இதன் பேரில்  பொதுமக்கள், விவசாயிகள் 300 பேரின் மீது வழக்கு பதிவு செய்து திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ,சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ,பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

தற்போது லட்சுமிபுரம் சுங்கச்சாவடிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதா? என்பது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் முற்றுகை – அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்..!

MUST READ