கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வாக்காளர் அட்டையை ஒப்படைத்து ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ரூபாய் 55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை!
மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியால் திருமங்கலம் தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்களும், அப்பகுதி மக்களும் கடுமையானப் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இந்த நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியை மேலக்கோட்டை விளக்கு பகுதியில் மாற்ற வேண்டும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினர் ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கப் போவதாகவும் பொதுமக்கள் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!
ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மதுரை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.