தென் மாநிலங்களில் இருக்கும் ஐந்து சுங்கச்சாவடிகளில் 132 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக சிஏஜி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 26 டோல்கேட்களில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக அரசு அரசாணை!
மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, கடந்த 1992- ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008- ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் உயர்த்தப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் 26 சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
உயர்நீதிமன்றக் கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலிஜியம் பரிந்துரை!
ரூபாய் 5 முதல் ரூபாய் 50 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.