தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் சரிவர குறைந்தது .தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகிறது…
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் தக்காளியின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. சென்னையில் தக்காளி கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர் .அதோடு சேர்த்து காய்கறிகள் விளையும் உயர்ந்ததால் பொதுமக்களுக்கு சிரம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தொடர்மழையால் தக்காளியின் சாகுபடி குறைந்துள்ளது. தக்காளி விளைச்சல் அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தட்டுப்பாட்டு காரணமாக வடமாநிலங்களில் கிலோ ரூபாய் 230 முதல் 260 வரை விற்பனை செய்யப்படுகிறது.அத்துடன் ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் தக்காளியின் விலை சரிவர குறைந்து கிலோ ரூபாய் 25க்கு விற்பனையாகி வருகிறது .இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தனர்.