Homeசெய்திகள்தமிழ்நாடுரேசன் கடையில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை

ரேசன் கடையில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை

-

ரேசன் கடையில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை

வெளிச்சந்தைகளில் தக்காளி விலை குறைந்ததையடுத்து, ரேஷன் கடைகள், பசுமை பண்ணை கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகளில் தக்காளி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று ஒரே நாளில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு

கடந்த ஒரு மாதம் காலமாக தக்காளி கிலோவிற்கு 180ல் இருந்து 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலையை கட்டுப்படுத்துவதற்கும், மக்களின் அத்தியாவசிய விலை அதிகரிப்பு சுமையை குறைப்பதற்கும் தமிழக அரசு 500 ரேஷன் கடைகளிலும், பசுமை பண்ணை கடைகள் மற்றும் நடமாடும் பசுமை பண்ணை அங்காடிகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தற்போது கோயம்பேட்டில் தக்காளியின் விலை கிலோவிற்கு 70 ரூபாய் விற்கப்படுவதால், தமிழக அரசு தரப்பில் தற்போது தக்காளி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ