Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

-

கோவை குற்றால அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து 2 மாதங்களுக்கு பின்னர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை சாடிவயல் அடர்ந்த வனப்பகுதிக்குள் கோவை குற்றால அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

இந்த நிலையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததால் கோவை குற்றால அருவிக்கு தண்ணிர் வரத்து சீரானது. இதனை தொடர்ந்து, 2 மாதங்களுக்கு பின்னர் கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

MUST READ