திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற முன்னாள் ரயில்வே ஊழியர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி காயம் அடைந்தார்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணம் செய்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஜெயச்சந்திரன் ரயில் நிற்கும் முன்பாக இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்த ஜெயச்சந்திரன் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார்.
இதனை தொடர்ந்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, ரயில்வே போலிசார் மற்றும் பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் லேசான காயம் அடைந்த ஜெயச்சந்திரனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.