ஆகஸ்ட் 17- ஆம் தேதி லக்னோவில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை மதுரை வந்தடைந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தையடுத்து, ஆன்மீக பயணிகள் அலறியடித்தப்படி, ரயிலில் இருந்து கீழே இறங்கிய நிலையில், சுமார் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
‘நிலவில் 8 மீட்டர் பயணித்த பிரக்யான் ரோவர்!’
ரயில் தீ விபத்து நேர்ந்தது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்!
லக்னோவின் புனலூரில் இருந்து மதுரை வந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்டது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் 2 ரயில் பெட்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. காலை 05.15 மணிக்கு அந்த ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 05.20 மணிக்கு தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்.
காலை 07.15 மணியளவில் ரயிலில் பற்றிய தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. ரயில் பெட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் கண்டெடுக்கப்பட்டது. தண்டவாளத்தில் சிதறிக்கிடக்கும் உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள்.
சட்ட விரோதமாக சிலிண்டரில் பயணிகள் சமைக்க முயன்ற போது, தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
“லேண்டர் தரையிறங்கிய தினம் தேசிய விண்வெளி தினம்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!
ரயில் விபத்தில் இதுவரை 5 ஆண்கள், 3 பெண்கள் அடையாளம் தெரியாத ஒருவர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே துறை அதிகாரப்பூர்வமாக. அறிவித்துள்ளது
தமிழக அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ரயில்வே பாதுகாப்புப் படையின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயின் கூடுதல் மேலாளர் கவுசல் கோசல், ரயில்வே ஐ.ஜி. சந்தோஷ் சந்திரன் மதுரைக்கு விரைகின்றனர்.